நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

பிறந்தநாள் டிரீட்

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சிம்புவின் பிறந்த நாளான இன்று ‘பத்து தல’ திரைப்படக்குழு சிறப்பு போஸ்டர் மற்றும் ‘பத்து தல’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ள அப்டேட்டுகள் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

‘பத்து தல’

ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தை, ‘சில்லுனு ஒரு காதல்’ இயக்குனர் ஒபலி என். கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here