ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் ‘WeStandWithSuriya’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

‘ஜெய்பீம்’

2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயரிப்பில், சூர்யா நடிப்பில் கடந்த 2-ம் தேதி OTT தளத்தில் வெளியானது ‘ஜெய்பீம்’ திரைபடம். இதில் லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1995-ம் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘ஜெய்பீம்’ திரைபடம் உருவாகியிருந்தது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டு தெரிவித்து இருந்தனர்.

அறிக்கை, விளக்கம் 

‘ஜெய்பீம்’ திரைப்பட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு நடிகர் சூர்யாவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு நடிகர் சூர்யாவும், “எந்த ஒரு தனி நபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் தனக்கில்லை” என விளக்கம் அளித்தார்.

பெருகும் ஆதரவு

படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையாயின. இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதனை கண்டிக்கும் விதமாக டுவிட்டரில், நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ‘WeStandWithSuriya’என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்ளும் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here