மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கையல்ல என்றும் சாதிப்பதற்கு ஏராளமான விஷயங்கள் இருப்பதாகவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் முடிவு மனவேதனை அளிப்பதாக கூறியுள்ளார். தற்கொலை முடிவு என்பது பெற்றோர், உறவினர், நண்பர்களுக்கு கொடுக்கும் வாழ்நாள் தண்டனை எனவும் சூர்யா உருக்கத்துடன் பேசியுள்ளார். நம்பிக்கையோடு தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் அனைவரும் ஜெயிக்கலாம் எனவும் மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.