விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை 4 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5-ன் டீசர்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன. அதில் பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். “பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில், ஒவ்வொரு சீசனிலும் தனது பெயரை பார்ப்பதாகவும், தான் பிக்பாஸ் தமிழ் 5-ம் சீசனில் பங்கேற்கவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்குமாறும் லட்சுமி ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here