7 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை திரிஷா கன்னட திரையுலகில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

மனம் கவர்ந்த நடிகை

தென்னிந்திய திரையுலகில் கடந்த 17 வருடங்களாக தொடர்ந்து நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். என்றும் இளமை என்றால் அது நம்ம திரிஷா தான் என ரசிகர்கள் எப்போதும் கூறி வருகின்றனர். 37 வயதை கடந்துவிட்ட திரிஷாவை பார்க்கும் அனைவருமே அவருக்கு 18 வயது என்றுதான் சொல்லத்தோன்றும் அளவிற்கு தனது அழகால் சொக்க வைப்பவர் திரிஷா. அபியாக, ஜெஸ்ஸியாக, ஜானுவாக கொண்டாடப்படும் திரிஷாவின் இடத்தை, எந்த ஒரு தமிழ் நடிகையும் இதுவரை பிடிக்கவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

ரொம்ப பிஸி

தற்போது நடிகை திரிஷாவின் கைவசத்தில் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து வருகிறார்.

ரீ-என்ட்ரி

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் திரிஷா, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘பவர்’ படம் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் கன்னட படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அவர், 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். பவன் குமார் இயக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க திரிஷா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here