கொரோனா இறப்பு விவரத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவமனையில் ஆய்வு

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், படுக்கை வசதிகள் அவர் குறித்தும் கேட்டறிந்தார்.

வெளிப்படைத்தன்மை வேண்டும்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதாகவும், கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். சேலம் உருக்காலையில் 500 படுக்கை வசதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்த நிலையில் அவை இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். கொரோனா இறப்புகளை அரசு வெளிப்படைத்தன்மையுடன் அறிவிக்க வேண்டும் அப்போது எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here