அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் ஆராய்ச்சி செய்து வரும் கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறையை காக்க தமிழர்கள் கைகொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தலைசிறந்த தமிழ் துறை

சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெர்மனியில் இயங்கி வரும் கொலோன் பல்கலைக்கழகம் தமிழ் ஆராய்ச்சி செய்து வருகிறது. பெருகி வரும் புலம்பெயர் தமிழர்களின் நலனுக்காகவும், ஐரோப்பாவில் தமிழ் பயில்வதைப் பேணவும் தமிழ்த் துறை செயல்படுகிறது. மேலும் ஓலைச்சுவடிகள் பட்டியலிடப்பட்டு கணினி மயமாக்குதல், இணைய தமிழ் அகராதி, இலக்கியம் மற்றும் கிராமிய கலைக்கல்வி போன்றவைகளை பல்வேறு நாடுகளின் வகுப்புகளில் பகிர்ந்துகொள்வது போன்ற பணிகள் தமிழ்த் துறையின் மூலம் செய்யப்பட்டு வருகிறது. பல இன்னல்களை தாண்டி தமிழ்த் துறை தமிழுக்கான பணியை சிறப்பாக செய்து வந்தது.

கோரிக்கை

இந்த நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்த் துறையை மூட முடிவு செய்யப்பட்டது. சரியான நேரத்தில் அமெரிக்காவின் ஹார்வர்டு தமிழ் இருக்கை கொடுத்த நிதியால் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வகுப்புகளை நடத்த முடியும். இப்பணி மேலும் தொடர கொலோன் தமிழ்த் துறைக்கு மார்ச் 2021க்குள் € 137500 நிதி தேவைப்படுகிறது. இதற்காக திரட்டப்படும் நிதி தமிழ் பற்றிய ஆராய்ச்சிக்காகவும், தமிழை நவீன முறையில் சொல்லிக் கொடுக்கும் யுக்திகளை முன்னெடுக்கவும் உதவும். குறிப்பாக 40 ஆயிரத்திற்கும் அதிகமாக தமிழ் புத்தகங்களை கொண்ட நூலகத்தை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும். எனவே போதிய நிதி அளித்து உதவிடுமாறு ரைன் தமிழ் குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுபற்றிய வீடியோ இணைப்பு:

நிதி அளிப்பவர்கள்:

https://www.betterplace.org/de/projects/90770-save-cologne-tamil-studies

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here