சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உச்சம் தொட்ட விலை

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.42 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது தங்கம் விலை. அதன்பிறகு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் 2021 ஜனவரி மாதத்தில் தங்கத்தின் விலை சரிந்துள்ளது.

திடீர் சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,608-க்கும், ஒரு சவரன் ரூ.36,864-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ரூ.69.70 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.69,700-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை சரிந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here