மலையாளத்தில் நயன்தாரா நடித்து வந்த ‘நிழல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நயன் என்ட்ரி

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அவரை அழைக்கத் தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் நயன். முதன்முதலில் ‘மனசினக்கரே’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான நயன்தாரா, அதன்பிறகு தமிழில் ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமானார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் அவர், தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

படப்பிடிப்பு நிறைவு

வருடத்திற்கு ஒரு படமாவது தாய் மொழியான மலையாளத்தில் நடித்துவிட வேண்டுமென்ற உறுதியுடன் இருக்கும் நயன்தாரா, கடந்த ஆண்டு நிவின் பாலியுடன் “லவ் ஆக்ஷன் டிராமா” என்ற படத்தில் நடித்தார். இப்படம் வெற்றியடைந்ததையடுத்து, தற்போது “நிழல்” என்னும் நடித்து வருகிறார். குஞ்சாக்கோ போபான் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது. விறுவிறுப்பாக நடந்த படப்பிடிப்பு 45 நாட்களில் நிறைவடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here