இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நயன்தாராவுக்கு, அவரது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.

‘நெற்றிக்கண்’

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் பிறந்தநாள் பரிசு ஒன்றை கொடுத்த அசத்தியுள்ளார். விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

பிறந்தநாள் பரிசு

இன்று நயன்தாராவின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு பிறந்தநாள் பரிசாக ‘நெற்றிக்கண்’ படத்தின் டீசரை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். கண் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, ஒரு குட்டிக் கதை சொல்வது போல் அமைந்துள்ள இந்த டீசர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திரில்லர் படமான உருவாகியுள்ள இப்படத்தை, அடுத்தாண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here