பிக் பாஸ் போட்டியாளரும், நடிகையுமான சனம் ஷெட்டியின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்து வரும் படத்தின் படக்குழுவினர் பிறந்த நாள் பரிசு கொடுத்து அசத்தியுள்ளனர்.

புதிய படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை சனம் ஷெட்டி. இவரது நடிப்பில் ‘எதிர் வினையாற்று’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. அலெக்ஸ் நாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப் படத்தில், சனம் ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

டிரைலர் வெளியீடு

இந்த நிலையில், சனம் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘எதிர் வினையாற்று’ படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்திற்கு யுவன் கார்த்திக் இசையமைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here