லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு, தலைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி இயக்குநர்

‘மாநகரம்’ படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக ‘கைதி’ படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். ‘கைதி’ படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி முடித்தார். ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாததால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

இணையத்தில் வைரல்

‘மாஸ்டர்’ படத்தை அடுத்து கமல்ஹாசனின் 232-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘எவனென்று நினைத்தாய்’ என தலைப்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், டைட்டில் லுக் டீஸர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இப்படத்திற்கு ‘விக்ரம்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். இந்த டைட்டில் லுக் டீஸர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் ‘விக்ரம்’ என்ற தலைப்பில் ஏற்கனவே படம் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here