உடல் எடையை குறைத்த பின் நடிகர் சிம்பு எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

”ஈஸ்வரன்”

சுசீந்திரம் இயக்கும் சிம்புவின் 46வது படத்திற்கு ‘ஈஸ்வரன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக நடிகர் சிம்பு தனது உடல் எடையை சுமார் 20 கிலோ வரை குறைத்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஈஸ்வரன்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, நந்திதா, மனோஜ், பால சரவணன், முனிஸ்காந்த் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படம் பொங்கல் அன்று திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில், நடிகர் சிம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில், தான் உடல் எடையை குறைத்த பின் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் சிம்புவின் போஸ்டர்கள், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here