வாடகை பிரச்சனை தொடர்பாக நடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை முயற்சி

கன்னட சினிமாவில் அறிமுகமாகி தமிழில் நடிக்க வந்தவர் நடிகை விஜயலட்சுமி. விஜய் நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு ஆர்யா நடிப்பில் வெளியான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நடித்திருந்தார். போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையிலும் சிறிது காலம் நடித்து வந்தார். இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தினார். அண்மையில் தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கும் முயற்சி செய்தார்.

போலீஸில் புகார்

நடிகை விஜயலட்சுமி சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த 8 மாதங்களாக தங்கி வந்துள்ளார். இதற்கான வாடகை பணம் சுமார் 3 லட்சத்தை அவர் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விடுதியின் உரிமையாளர், விஜயலட்சுமி மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து, தான் கொடுக்க வேண்டிய வாடகை தொகையை கண்டிப்பாக தருவதாக விடுதி உரிமையாளரரிடம் அவர் உறுதியளித்துள்ளார். நடிகை மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here