நடிகைகள் மனவலிமையோடு இருக்க வேண்டுமெனவும் எந்த நடிகை மீதும் தனக்கு பொறாமை கிடையாது எனவும் பிரேமம் பட புகழ் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிஸி நடிகை

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான “பிரேமம்” திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் உடன் இணைந்து “கொடி” படத்தில் நடித்திருந்தார். தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக “தள்ளிப்போகாதே” படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

சிரிப்புதான் அழகு

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் தனது அழகு குறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “நடிகைகள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே அவர்கள் வலிமையான மனதோடு இருக்க வேண்டும். சினிமாவுக்கு வந்த புதிதில் ஒளிவு மறைவு இல்லாமல் பேட்டிகள் கொடுத்து, அதனால் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கு உள்ளானேன். மிகவும் அகங்காரம் பிடித்தவள் என்றும் கூறினர். அது வருத்தமாக இருந்ததால் மலையாளத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன். அந்த சமையத்தில் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தேன். என்னுடைய கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு என்று அனைவரும் சொல்கிறார்கள். எனது தலைமுடி நன்கு அடர்த்தியாக இருக்கும். மற்ற நடிகைகள் மீது பொறாமை கிடையாது. சக நடிகைகளின் நடிப்பு பிடித்திருந்தால் போன் செய்து பாராட்டுவேன். 3 படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். எதிர்காலத்தில் டைரக்டர் ஆவேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here