பிரபல நடிகை ரம்யா பாண்டியன் நடித்துள்ள வெப் சீரிஸ் ஒன்று OTT தளத்தில் வெளியாக உள்ளது.

‘முகிலன்’

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன். ‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். தற்போது இவரது நடிப்பில் ‘முகிலன்’ என்ற வெப் சீரிஸ் ஒன்று உருவாகி உள்ளது. அதில் ரம்யா பாண்டியனுக்கு ஜோடியாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ புகழ் கார்த்திக் ராஜ் நடித்திருக்கிறார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘முகிலன்’ வெப் சீரிஸ், கேங்க்ஸ்டர் கதையம்சத்தை கொண்டது.

OTTயில் வெளியீடு

இந்த வெப் தொடரில் ராபர்ட் மாஸ்டர், ஆடுகளம் நரேன், ஜூனியர் பாலையா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ ராம் இயக்கியுள்ள இந்த தொடருக்கு, விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். அக்டோபர் 30 ஆம் தேதி OTT தளத்தில் ‘முகிலன்’ வெப் தொடர் வெளியாக உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here