ஏழை மாணவர்களுக்கு எதிராகவும், கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழுக் கூட்டம்

அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தேர்தல் குறித்து ஆலோசனை

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு மொழிக் கொள்கை, நீட் தேர்வு உள்ளிட்டவைகள் தொடர்பாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன;

தீர்மானங்கள்

* கொரோனா நோய் தொற்று காலத்தில் மக்களின் துயர் துடைக்க அயராது அரும்பணி ஆற்றி வரும் முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் நன்றி, பாராட்டு.

* அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும் ஆட்சியமைக்க பாடுபட வேண்டும்.

* கொரோனா பரவலை குறைத்திருப்பதை ஏற்று மத்திய அரசு, தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும்.

* எந்த மொழிக்கும் அதிமுக எதிரானதல்ல; ஆனால் மொழி திணிப்பை உறுதியாக எதிர்க்கிறோம். இருமொழிக்கொள்கையே அதிமுகவின் கொள்கை.

* ஏழை மாணவர்களுக்கு எதிராகவும் கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வை கைவிட வேண்டும்.

* ஜிஎஸ்டி மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானியங்களின் நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

* கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களுக்கு இடமளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

* கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், இலங்கைத் தமிழர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

* காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here