அஜித், பார்த்திபன், தேவயானி நடிப்பில் வெளியான ‘நீ வருவா என’ திரைப்படத்தின் பாடல் வரிகள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஹேஷ் டேக்

சமூக வலைதளத்தில் காரணமே இல்லாமல் பல்வேறு ஹேஷ் டேக்கள் மற்றும் மீம்கள் வைரலாகிறது. சமீபத்தில் கூட சமுத்திரக்கனியை வைத்து பல்வேறு மீம்கள் வெளியானது. இதேபோல் சில நாட்களுக்கு முன்பு #ஃபிரே பார் நேசமணி என்ற ஹேஸ் டேக் வடிவேலுவை வைத்து மிகவும் டிரெண்டிங் ஆனது. அந்த வரிசையில், தற்போது அஜித், பார்த்திபன், தேவையானி நடிப்பில் வெளியான ”நீ வருவாய் என” படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் முதல் வரியான “பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா” பாடல் உலக அளவில் டிரெண்டாகியுள்ளது.

டிரெண்டிங்கில் ‘நீ வருவாய் என”

ராஜகுமாரன் இயக்கத்தில், எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைப்பில் 1999ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘நீ வருவாய் என’. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களில் ‘பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா… பூங்காற்றே பிடிச்சிருக்கா…’ என்ற பாடல் ஹிட்டானது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு யூ டியூபில் பதிவேற்றப்பட்ட இப்பாடல், 13 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே பெற்றிருந்தது. ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென இரண்டே நாளில் 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அதற்குக் காரணமாக அமைந்தது ஒரே ஒரு கெட்ட வார்த்தை மீம். ‘பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா’ என்ற பாடல் வரிக்கு அடுத்த வரியில் ஒரு கெட்ட வார்த்தையைச் சேர்த்து மீம் வெளியிட, அது என்ன பாடல் என யூ டியூப்பில் அனைவரும் தேட, ஒரு கோடி பார்வையாளர்கள் கூடுதலாக கிடைத்துவிட்டது. இப்போது சமூக வலைத்தளங்களில் யாரையாவது கிண்டல் செய்வதற்கு பயன்படும் மீம்களில் ஒன்றாக, இந்த ‘பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா’ பாடலில் தேவயானி கையில் கிளியை வைத்துப் பாடும் போட்டோ இடம்பெற ஆரம்பித்துவிட்டது. நல்ல இனிமையான பாடலை, இப்படி ஒரு அர்த்தம் கொடுத்து மாற்றிவிட்டது மீம்ஸ் சமூகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here