பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரபல நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தீராத பிரச்சனை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். இவரது மரண வழக்கு பல சர்ச்சைகளை கடந்து தற்போது போதைப்பொருள் விவகாரத்தில் வந்து நிற்கிறது. சுஷாந்த மரண வழக்கு மட்டுமின்றி, அனைத்து சினிமா துறையினரும் போதைப் பொருளைப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக பல நடிகைகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளநர். சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும், சுஷாந்த் சிங்கிற்கு போதை பொருட்களை டீயிலும், தண்ணீரிலும் கலந்து கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ரியாவையும், அவரது சகோதரர் மற்றும் மேனேஜர் ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல முன்னணி நடிகர், நடிகைகளின் பெயர்களை கூறியதாக செய்திகள் வெளிவந்த பிறகு, ரகுல் பிரீத் சிங் மற்றும் சாரா அலி கான் ஆகியோரது பெயர்கள் அடிபட்டது. சாரா அலி கான் சுஷாந்தை காதலித்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது.

நடிகைகளுக்கு சம்மன்

சிபிஐ கையில் இருக்கும் சுஷாந்த் வழக்கு, பல திசைகளை நோக்கி சென்றுகொண்டே இருக்கிறது. அதில் தற்போது சாரா அலி கானுக்கும், ரியாவின் நெருங்கிய தோழியான ஷர்தா கபூருக்கும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. மறைந்த சுஷாந்த் சிங்கின் பண்ணை வீட்டில் நடந்த பார்ட்டியில் இவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், அதனால் இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு விசாரணை எங்கு சென்று முடியும் என யூகிக்க முடியாத அளவிற்கு, பல முன்னணி நடிகர், நடிகைகளின் பெயர் அடிபட்டு கொண்டே இருக்கிறது. போதைப் பொருள் விவகாரம் பாலிவுட் மட்டுமின்றி அனைத்து சினிமா துறையையும் ஆட்டிப்படைத்து வருகிறது. கன்னட நடிகைகள் கைது செய்யப்பட்ட போது, மலையாளத் திரையுலகிலும் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை கூறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here