பிரபலமான நடிகர்களை குறிவைத்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த மீரா மிதும் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து கருத்து பதிவிட்டு மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

வம்பிழுக்கும் மீரா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மீரா மிதுன், தொடர்ந்து தமிழ் சினிமாவையும், முன்னணி நடிகர், நடிகைகளையும் விமர்சித்து வருகிறார். சூர்யா, விஜய் ஆகியோரை வம்பிழுத்து வந்த மீரா, அவர்களது மனைவிகள் குறித்து தகாத வார்த்தைகளால் பேசி ரசிகர்களிடம் செமயாக வாங்கிக் கட்டிக்கொண்டார். தமிழ் சினிமாவில் நெப்போடிசம், மாஃபியா, குரூப்பிசம் போன்ற பல குற்றச்சாட்டுகளை அவர் அடுக்கிக் கொண்டே போனார். சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனை டார்கெட் செய்த மீரா, அவர் பிக் பாஸ் சீசன் 4 நடத்த முடியாது என பகிரங்கமாக கூறி வம்பிழுத்தார். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விஷயத்தை பேசும் மீரா மிதுன், அதில் ஏதேனும் ஒன்றைக்கூட இதுவரை செய்ததில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

மீண்டும் சர்ச்சை

நடிகர் விஜய்யை குறை சொல்வதையே வேலையாக கொண்டிருந்த மீரா மிதுன், ‘மாஸ்டர்’ பட போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதாக கூறினார். அதைதொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் ‘எவனென்று நினைத்தாய்’ படத்தின் போஸ்டரை கையில் எடுத்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் பிரெஞ்சு பட போஸ்டர் என்று மீரா மிதுன் கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் அவரது மூளையை பயன்படுத்துவது இல்லை என்றும் ஆனால் மற்ற படங்களை நன்றாக காப்பி அடிக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார். மாஸ்டர் படத்தின் போஸ்டரை கூட தனது போட்டோவில் இருந்து காப்பி செய்துள்ளார் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மீரா மிதுனின் இந்தப் பதிவைப் பார்த்த நெட்டிசன்ஸ், வழக்கம்போல் கமெண்ட்டுகள் மூலம் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here