திரையரங்குகள் திறக்கப்படாததால் ‘மாஸ்டர்’ படத்தை OTTயில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘மாஸ்டர்’

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். ‘தளபதி’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய், தனது அசாத்தியமான நடிப்பு, நடனம் போன்றவைகளால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறார். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “மாஸ்டர்” திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மகேந்திரன், அர்ஜூன் தாஸ், மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், பட வெளியீடு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

OTTயில் ‘மாஸ்டர்’?

கொரோனா காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என தெரியாததால், பல்வேறு திரைப்படங்கள் நேரடியாக OTTயில் வெளியிடப்படுகின்றன. ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ ஆகிய படங்கள் OTT தளத்தில் வெளியான நிலையில், சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களும் OTTயில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படமும் OTTயில் ரிலீஸாக இருப்பதாகவும், அமேசானுடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here