லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமண செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நயன்தாரா, பிரபுதேவா காதல்
தமிழில் முன்னணி நடிகையான நயன்தாரா சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவருடனும் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். பிரபுதேவா மீதிருந்த அளவு கடந்த அன்பினால் அவருடைய பெயரை தன்னுடைய கையில் பச்சை குத்தி கொண்டார் நயன்தாரா. மேலும், மதம் மாறி பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டதாகவும் சில தகவல்கள் வெளியாகின. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தது நாம் அனைவருமே அறிந்ததுதான். தற்போது, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 5 வருடத்திற்கு மேலாக நயன்தாரா ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை கோலிவுட் வட்டாரம் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் உள்ளது. ரசிகர்கள் அவ்வபோது இவர்கள் திருமணம் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஏதேனும் கிடைத்தால்கூட, அதை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து பெரிதாக்கிவிடுவார்கள். அந்த செய்திகளுக்கு இருவர் தரப்பிலிருந்தும் மறுப்பு வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
டிசம்பரில் திருமணம்?
இந்த நிலையில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் டிசம்பரில் திருமணம் நடக்கப்போகிறது என்ற செய்து தற்போது ஹாட் டாக் ஆக இருந்து வருகிறது. ஏற்கனவே இவர்களின் திருமணச் செய்தி காட்டுத்தீ போல் பரவியதால், நயன்தாரா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். ஆனால், இதுதொடர்பாக நயன்தாராவோ, விக்னேஷ் சிவனோ வாய் திறக்கவில்லை. ஏற்கனவே நயன்தாராவுடனான திருமணம் பற்றி பேசிய விக்னேஷ் சிவன், இருவரும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது நிறைய இருப்பதாகவும், அதற்கு முன் திருமணத்தைப் பற்றி யோசிக்க கூட முடியாது என்றும் கூறினார். தற்போது டிசம்பரில் திருமணம் என்று வெளிவந்த செய்தி உண்மைதானா? என ரசிகர்கள் ஆர்வத்துடன் அவர்களது இன்ஸ்டா, டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளப் பக்கத்தில் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.