தேவையானவை
மைதா மாவு – 1 டம்ளர்
புளிப்பான தயிர் – 1 டம்ளர்
சீரகம் – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
சோடா உப்பு – சிறிதளவு
பச்சை மிளகாய் – 5
எண்ணெய் – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் மைதா மாவுடன் சீரகம், உப்பு, பெருங்காயத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தயிர் சேர்த்து கெட்டி தன்மையுடன் கரைக்க வேண்டும். கைகளில் சிறிதளவு எண்ணெய்யை தடவிக் கொண்டு, மாவை உருண்டை தன்மையில் சிறிது சிறிதாக உருட்டி எடுத்துக்கொள்ளவும். பின்னர் வாணலியில் இருக்கும் எண்ணெய் சூடான பிறகு, தயார் செய்யப்பட்ட உருண்டைகளை அதில் போட்டு நன்றாக சிவந்த பின் எடுத்தால் அருமையான மைசூரு போண்டா தயார்.