மலையாள மொழி பேசும் மக்களால் நேற்று ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் பலர் வண்ண வண்ண புடவைகளில் அசத்தும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சாதிக்கும் தொகுப்பாளினிகள்

சினிமாவில் நடித்து வெற்றி பெற்ற நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் சீரியல் நடிகர்களும் மக்கள் மனதில் பெருமளவில் இடம் பிடிக்கின்றனர். சினிமா நடிகைகளுக்கு மத்தியில் நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சீரியல் நடிகைகளும் தங்களது புகைப்படங்களையும், கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். மேலும் சீரியலில் நடித்து மக்கள் மனதில் நின்ற சில நடிகர், நடிகைகள் வெள்ளித்திரையிலும் வெற்றி பெற்றது உண்டு. சினிமாவில் மற்றொரு துறை மிகவும் பிரபலம் என்றால் அது தொகுப்பாளர்கள் தான். அழகான பார்வையாலும், துறுதுறு பேச்சாலும், மனதைக் கவரும் வார்த்தைகளால் பேசியும் அனைவரின் மனதில் இடம்பிடிக்க வேண்டியது அவர்களின் முக்கிய வேலை. அனைவராலும் அந்த இடத்தை நிறைவு செய்ய முடியாது. சிலர் மட்டுமே மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிப்பார்கள்.

டிடி

தொகுப்பாளினிகள் பலர் நேற்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். விஜய் டிவி தொகுப்பாளினி டிடி ஓணம் பண்டிகையையொட்டி அழகான புடவையில் இருக்கும் அசத்தல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 1990ஆம் ஆண்டு ‘சுப யாத்ரா’ என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து எடுத்து வைத்த டிடி என்கின்ற திவ்யதர்ஷினி, ஜூலி கணபதி, நலதமயந்தி, விசில், சரோஜா, பவர் பாண்டி, சர்வம் தாள மயம் என பல படங்களில் நடித்துள்ளார். அவர் எத்தனை படங்களில் நடித்தாலும் தொகுப்பாளினியாக பல முன்னணி நட்சத்திரங்களின் மனங்களை மட்டுமல்லாமல் பல ரசிகர்களையும் வென்றுள்ளார். உங்கள் தீர்ப்பு என்ற தொலைக்காட்சி ஷோவில் தொகுப்பாளினியாக அறிமுகமான டிடி, ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ், சூப்பர் சிங்கர், காபி வித் டிடி, அச்சம் தவிர், அன்புடன் டிடி, என்கிட்ட மோதாதே, ஸ்பீட் செட் கோ என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட ஓணம் புகைப்படங்கள் அனைவராலும் ரசிக்கப்படும் அளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

தியா மேனன்

முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான சன் டிவி குழுமத்தின் அங்கமான சன் மியூசிக்கில் முக்கிய தொகுப்பாளினி என்றால் தியா மேனன் தான். பார்ப்பதற்கு மெழுகு சிலை போல் இருக்கும் தியாவிற்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். சன் மியூசிக்கில் ஒளிபரப்பான கிரேசி கண்மணி, கால் மேல காசு போன்ற நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியுள்ளார். 2016ஆம் ஆண்டு கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையிலும் வெற்றிக் கொடியை நாட்டி, குடும்பத்திலும் கிரேசி கண்மணி ஆகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டிய போதும், தொகுப்பாளினி வேலை தான் தனக்கு பிடிக்கும் என்று இருக்கிறார் தியா மேனன். அவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் நல்ல வரவேற்பை பெறும் நிலையில், ஓணம் புடவையில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்து ரசிகர்களாலும் பெருமளவு விரும்பப்பட்டது.

அஞ்சனா

சன் மியூசிக் சேனலின் மற்றுமொரு தொகுப்பாளினியான அஞ்சனா, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். அஞ்சனாவிற்கு நடிப்பு என்றாலே பிடிக்காதாம். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாக அவருக்கு, நடிப்பே பிடிக்காது என்று சொல்வது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் ஒரு தொகுப்பாளினியாக முன்னணி இடத்தில் நிற்கிறார். வாழ்த்துக்கள், பாட்டு புதுசு, நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், பாக்ஸ் ஆபீஸ், நீங்களும் நாங்களும் போன்ற நிகழ்ச்சிகள் வெற்றி பெறுவதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய அஞ்சனா, தான் ஓணம் புடவையில் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வெள்ளித்திரையில் நடிகர், நடிகைகள் ஒரு பக்கம் கலக்கிக் கொண்டிருக்க, மறுபக்கம் சீரியல் நடிகைகள் ஷோசியல் மீடியாவை அலங்கரித்து கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here