பிரபாஸ், தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நிவேதா தமாஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

குழந்தை நட்சத்திரம்

மலையாளத்தில் ‘வெறுத்தே ஒரு பார்யா’ என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ். ‘குருவி’ என்ற தமிழ் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் மத்திய வேனல், பிரணயம், சாப குரிஷ் என்று தொடர்ந்து மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த நிவேதா, போராளி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்தார். மலையாளம் தனது தாய் மொழி என்பதால், அதில் அதிக படங்கள் நடித்து வந்தார். ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார். பிறகு கமலஹாசனுடன் பாபநாசம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அசத்தினார். உலக நாயகனின் மகளாக நடித்த நிவேதா தாமஸுக்கு, சூப்பர்ஸ்டாரின் மகளாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மகளாக நடித்து அவரது ரசிகர்களையும் தன் வசம் ஈர்த்தார். தமிழ், மலையாளம் என்று மட்டும் நடித்துக் கொண்டிருந்த நிவேதா தாமஸ், ‘ஜென்டில்மேன்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன்பின் நின்னுக்கோரி, ஜெய் லவா குசா, ஜூலியட் லவ்வர் ஆஃப் இடியட், 118 போன்ற பல தெலுங்கு படங்களில் நடித்தார். தற்போது 4 படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

பிரபாஸ் படத்தில் நிவேதா

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், தற்போது ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் என்று பல பிரம்மாண்ட படங்களை தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் வைஜெயந்தி பிக்சர்ஸ் தயாரிப்பில், நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். பிரபாஸ், தீபிகா என்று முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் அப்படத்தில் நிவேதா தாமஸுக்கு ஒரு முக்கிய ரோல் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுபற்றி படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. இதுவரை தங்கை, மகள் என்று நடித்து வந்த நிவேதாவுக்கு, பிரபாஸ் படத்திலும் சப்போர்டிங் கேரக்டர்தானா என்று ரசிகர்கள் முணுமுணுக்கும் அதேவேலையில், முக்கிய கதாபாத்திரம் என்பதால் இவருக்கு தனி அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here