நடிகர்கள் விஜய், சூர்யா குறித்து சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருவதை கண்டித்து கலாம் இயக்கத்தினர் மீரா மிதுனின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தனர்.

சர்ச்சை நாயகி

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் சர்ச்சைக்கு பெயர் போனவர். சமீபத்தில் ரஜினி, விஜய், சூர்யா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளைச் சீண்டி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் உள்ளவர்களே அதிகம் என்றும் நெப்போடிசம், மாஃபியா போன்றவைகள் அனைத்தும் தலைவிரித்து ஆடுவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். நெப்போடிசம் புரொடக்ட்ஸ் மட்டும்தான் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள் எனத் தெரிவித்த அவர், ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் விமர்சித்தார். மேலும் நடிகர்கள் விஜய் மனைவி சங்கீதா மற்றும் சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோரைப் பற்றி தரக்குறைவாக பேசி சர்ச்சையை உருவாக்கினார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக இருக்கும் சூர்யாவும், விஜய்யும் பற்றி மீரா மிதுன் பேசியதற்கு திரைத்துறையினரும், அவரது ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உருவ பொம்மை எரிப்பு

இந்த நிலையில், விஜய், சூர்யா குடும்பத்தினரை தரக்குறைவாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலாம் சேவை மையம் சார்பில் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதனை அறிந்த மீரா மிதுன், கேலி செய்து பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த அமைப்பினர், மீரா மிதுனின் உருவ பொம்மைகயை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here