சின்னத்திரை ஜோடி சஞ்சீவ் – ஆல்யா மானசாவின் மகள் ஜலா சையத் மிக அழகாக கை கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காதல் திருமணம்
ராஜா ராணி தொடரில் அப்பாவி செம்பாவாக நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த தொடரில் தனக்கு கணவராக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆல்யாவின் பிறந்தநாள் அன்று சிம்பிளாக திருமணம் செய்து கொண்டதாக சஞ்சீவ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் தெரிவித்த பிறகே அனைவருக்கும் அந்த விஷயம் தெரியவந்தது.
கொஞ்சி விளையாடும் வீடியோ
இதனையடுத்து சமீபத்தில் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆல்யா மானசா. அவர் தனது செல்ல மகளின் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஆல்யா, தனது மகளுடன் கொஞ்சி விளையாடுவது போன்ற வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். கடந்த மூன்று மாதங்களாக லாக்டவுன் என்பதால் ஆல்யா மானசா – சஞ்சீவ் ஆகிய இருவரும் தங்கள் குழந்தையுடன் 24 மணி நேரத்தையும் செலவிட்டு வருகின்றனர். தற்போது தனது குழந்தைக்கு சஞ்சய் கை கொடுக்க, அதற்கு ஐலா சையத்தும் செம கியூட்டாக கை கொடுக்கும் வீடியோவை ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இதைப் பார்த்த இணையதள ரசிகர்கள் பலரும் குழந்தை கியூட்டாக இருப்பதாக கூறி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.