துருக்கி அதிபரின் மனைவியை நடிகர் அமீர்கான் சந்தித்து பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், இதற்கு பலர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
சூப்பர் ஹிட் படம்
ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் படமான ஃபாரஸ்ட் கம்ப், தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. டாம் ஹாங்க்ஸ், ராபின் ரைட், கேரி சினிஸ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்த இப்படம் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, இறுதியில் 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது. 1994 ஆம் ஆண்டு வெளிவந்து அனைவரையும் கவர்ந்த இந்தப் படத்தை தற்போது அமீர்கான் ஹிந்தியில் ‘லால் சிங் சாத்தா’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இதில் கரீனா கபூர், விஜய்சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர்.
அதிபர் மனைவியுடன் சந்திப்பு
கொரோனா ஊரடங்குக்கு முன்பு ராஜஸ்தான், சண்டியர், கேரளா, கொல்கத்தா, டெல்லி எனப் பல மாநிலங்களில் இப்படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டது. இந்தியாவில் தற்போது லாக்டவுன் முடிவுக்கு வராததால் படக்குழுவினர் அனைவரும் துருக்கிக்கு சென்றுள்ளனர். அங்கு படப்பிடிப்புகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், அமீர்கான் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்புகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும் சூழலில், நடிகர் அமீர்கான் துருக்கி அதிபரின் மனைவி எமினி எர்டோகனை சந்தித்துள்ளார். இஸ்தான்புலில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ள எமினி, புகழ்பெற்ற இந்தி நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் அமீர்கானை இஸ்தான்புலில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இணையதளவாசிகள் கடுப்பில் உள்ளனர். துருக்கி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு. பாகிஸ்தானுக்கும் நட்பு நாடாக இருக்கிறது. இந்நிலையில் அந்த நாட்டின் அதிபர் மனைவியை அமிர்கான் சந்தித்தால் என்ன அர்த்தம்? நடிகர் அமிர்கானின் சித்தாந்தம் என்ன? என்று கேள்வி கேட்டு எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.