தன்னுடைய திரைப்பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவு பெறும் நாளில், ‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

45 ஆண்டுகால திரை வாழ்க்கை

நடிகர் ரஜினிகாந்த் ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ‘அபூர்வ ராகங்கள்’ படம் ரிலீசாகி 45 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, மோகன் லால் முதல் ஸ்ரேயா வரை பல திரை பிரபலங்களை வைத்து காமன் டிபியை ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு #45YearsOfRajinismCDP என்ற ஹேஷ் டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரஜினி டுவீட்

ரஜினிகாந்தின் 45 ஆண்டுகால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக மோகன்லால், மம்மூட்டி, சிவகார்த்திகேயன் தொடங்கி தென்னிந்திய முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனால் நெகிழ்ச்சி அடைந்த நடிகர் ரஜினிகாந்த், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். #நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ என்ற ஹேஷ் டேக்கையும் ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளார். ரஜினியின் டுவீட்டையடுத்து #நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரண்ட் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here