அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக இருப்பதால் சென்னை மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

கோர விபத்து

கடந்த இரு தினங்களுக்கு முன்பு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் எனும் எரிபொருள் சேமிப்புக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பெரும் வெடி விபத்திற்கு அங்குள்ள வெடிமருந்து சேமிப்புக்கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் எனும் வெடிபொருள் காரணமாக அமைந்தது. 

சென்னைக்கு அச்சுறுத்தல்?

இதனிடையே, கடந்த 2015ம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர்கள் மூலமாக அமோனியம் நைட்ரேட் சட்டவிரோதமாக கொண்டுச் செல்லப்பட்டபோது, சுமார் 740 டன் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இதை அப்புறப்படுத்தி வேறு வகையில் உரமாக பயன்படுத்தவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். சென்னை துறைமுகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக சுமார் 35 க்கும் அதிகமான கண்டெய்னர்களில் 740 டன் அளவிலான அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகி சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுங்கத்துறை விளக்கம்

இந்நிலையில், தங்களிடம் உள்ள அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதாக சுங்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ 6 ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் மணலி சுங்கத்துறை கிடங்கில் பாதுகாப்பாக உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் மின்னணு முறையில் ஏலம் விடப்படும். மணலி  சுங்கத்துறை கிடங்கை சுற்றி வீடுகள் எதுவும் இல்லை” என்று தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here