தேவையானவை

பிரட் – 2 துண்டுகள்

வெண்ணை – 1 டேபிள் ஸ்பூன்

உருளைக்கிழங்கு- 1 (பெரியது)

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி – சிறிதளவு

மிளகாய்த்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

பச்சை மிளகாய் – 1

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து தோலை உரித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கரம் மசாலா, மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி, நெய் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிரெட் துண்டின் மேல் வெண்ணையை நன்றாக தடவி அதனுள் மசாலா கலவையை வைத்து மற்றொரு பிரட் துண்டை சேர்த்து மைக்ரோ அவன் அல்லது தவாவில் சமைத்து எடுத்தால் வித்தியாசமான, ருசியான உருளைக்கிழங்கு மசாலா சாண்ட்விச் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here