ரூ.1 கோடியே 25 லட்சம் தர வேண்டும் என்று தனது வக்கீல் மூலம் லட்சுமி ராமகிருஷ்ணன் மிரட்டுவதாக நடிகை வனிதா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சரமாரியாக திட்டிய வனிதா

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் குறித்து நாளுக்கு நாள் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. திரைப்பிரபலங்களும், நெட்டிசன்ஸூம் நடிகை வனிதாவிற்கு அறிவுரையும் அதேசமயம் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி போன்றோர் கருத்து கூறிய நிலையில், தனது வாழ்க்கையில் யாரும் தலையிடக்கூடாது எனத் தடாலடியாக பதில் அளித்தார் வனிதா. இதனால், அவர்கள் மன்னிப்புக் கேட்டு விலகினர். இந்த நிலையில், யூடியூப் நேரலை ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணனும், வனிதாவும் பங்கேற்ற போது லட்சுமிராகிருஷ்ணனை வனிதா சரமாரியாக தாக்கிப் பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய்ப் பரவியது.

புகார், கைது

வனிதா பேசியதைப் பார்த்து லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக டுவிட்டை போட்டார் நடிகை கஸ்தூரி. இதனைப் பார்த்துக் கடுப்பான வனிதா, கஸ்தூரியையும் ஒரு கை பார்த்தார். இதனிடையே வனிதா – பீட்டர் பால் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்டு வந்த சூர்யா தேவி என்பவருக்கும், வனிதாவுக்கும் வார்த்தைப் போர் மூண்டது. தன்னை அவதூறாக பேசியதாக கூறி சூர்யா தேவி, நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகர் ஆகியோர் மீது வனிதா போலீஸில் புகார் அளித்தார். இதில் சூர்யா தேவியை மட்டும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

வனிதாவுக்கு நோட்டீஸ்

இந்நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணும் அவரது கணவரும் குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் வனிதா விஜயகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பினர். பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்த Skype நேர்காணலின் போது வனிதா விஜயகுமார், தன்னையும் தனது கணவரையும் அநாகரிக வார்த்தைகளால் தாக்கிப் பேசியதாகவும், தன்னுடன் பேச வேண்டும் என்று வனிதா விஜயக்குமார் தான் அந்த சேனலை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார் என்றும் கூறினார். நேர்காணலில் வேண்டுமென்றே தவறான வார்த்தைகளோடு பேசியதாகவும் பின்னர் அது ஒளிபரப்பும் செய்யப்பட்டிருந்தது என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

மிரட்டுவதாக குற்றச்சாட்டு

இந்த நோட்டீஸை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள நடிகை வனிதா, “என் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவை இல்லாமல் தலையிட்டு போலி நீதிபதியாக இருக்க முயலும் நல்ல மனம் கொண்ட சமூக ஆர்வலர், எனக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் தரவேண்டும் என்று வக்கீல் மூலம் மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அவர் அனுப்பி இருப்பது நீதிமன்ற ஆவணம் அல்ல எனவும் நானும் அவருக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்ப உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here