தல அஜித் நடித்த ‘வாலி’ மற்றும் ‘வரலாறு’ ஆகிய படங்கள் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக வெளியான தகவல் குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

பெண்களை கவர்ந்த படங்கள்

கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் ‘விஸ்வாசம்’, ‘நேர்கொண்ட பார்வை’ ஆகிய படங்கள் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரி குவித்ததுடன், பல சாதனைகளையும் படைத்தது. இந்த இரு படங்களும் அஜித் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அஜித்தின் முந்தைய படங்களுக்கு பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பின்னர் சில படங்களில் அது குறைந்தது. கடந்த ஆண்டு வெளியான இவ்விரு படங்களும் பெண்களை மிகவும் கவர்ந்துள்ளது. ‘விஸ்வாசம்’ படத்தில் தந்தை – மகள் பாசமும், பெண்களுக்கு சமூகத்தில் நடக்கும் தவறுகளில் இருந்து அவர்களை தனது நேர்கொண்ட பார்வையால் காப்பாற்றும் வக்கீலாக ஒரு பக்கம் என இரண்டிலும் கலக்கினார் அஜித். இந்த இரு படங்களும் பெண்களை அதிகளவில் கவர்ந்தது. பெண்கள், பெண் குழந்தைகள் சமூகத்தில் எப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்றும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் இவ்விரு படங்களிலும் கூறியிருப்பார் அஜித்.

மீண்டும் வெற்றி கூட்டணி

தற்போது வினோத் இயக்கும் ‘வலிமை’ படத்தில் அஜித் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் ஷூட்டிங், கொரோனா வைரஸ் பிரச்சனையால் தடைப்பட்டது. ‘வலிமை’ படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். படத்தின் பெரும்பாலான பகுதி வெளிநாடுகளில் படமாக்க வேண்டும் என்பதால், அடுத்த ஆண்டு கோடை காலத்தில் தான் இப்படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. ‘வலிமை’ படத்தில் ‘காலா’ படத்தில் நடித்த ஹூமா குரேஷி அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதாகவும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

ரீமேக் உரிமை சர்ச்சை

இதனிடையே, அஜித் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன “வாலி” மற்றும் “வரலாறு” திரைப்படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாகவும், அதற்கான உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியன. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்த இந்த இரு படங்களும், நடிகர் அஜித் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத படமாக இன்று வரை நிலைத்து நிற்கிறது. மேலும் இவ்விரு படங்களுக்காக அஜித்துக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது. இதனிடையே, ‘வாலி’ மற்றும் ‘வரலாறு’ ஆகிய படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக வெளியான தகவலுக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. போனி கபூர் தரப்பிலும் இதில் உண்மை இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உருவாகும் “வலிமை” திரைப்படம் இந்தியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அஜித் திரைப்படங்களுக்கு இந்தியில் ஒரு நல்ல மார்கெட் இருப்பதால், இப்படத்தை டப் செய்து வெளியிடலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here