அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹோட்டலில் சாப்பிடச் சென்ற நடிகைக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் தகராறு

பியூட்டிஃபுல் ஓஹியோ, டீசன்ட் போன்ற படங்களில் நடித்தவர் ஸ்பென்சர் கிராமர். இவர் பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் கெஸ்லி கிராமரின் மகள் ஆவார். படங்களில் நடித்ததை விட டிவி சீரியல்கள் மூலம் இவர் பிரபலமானார். ரிக் அண்ட் மோர்டி, ராயல் பெயிண்ஸ், சிக்ஸ்டி கிரீஸ் போன்ற டிவி சீரியல்களில் ஸ்பென்சர் கிராமர் நடித்துள்ளார். இவர் கடந்த 26ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள ஹோட்டலில் தனது தோழியுடன் உணவருந்த சென்றுள்ளார். அவர்கள் உணவருந்திக் கொண்டிருந்த போது, அங்கு இளைஞர் ஹோட்டல் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்குள் சண்டை முற்றவே ஸ்பென்சரும், அவரது தோழியும் சேர்ந்து அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால், அந்த இளைஞர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நடிகை ஸ்பென்சரையும், அவரது தோழியையும் குத்திவிட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஸ்பென்சர் கிளாமருக்கு சின்ன காயமும், அவர் தோழிக்கு முதுகில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்பென்சர், பயப்படும்படி ஏதும் இல்லை என்றும் நாங்கள் குணம் அடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். நடிகையை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட இளைஞரை அடையாளம் கண்டுள்ளனர். மேலும் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு சம்மந்தப்பட்ட நபரைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here