கொரோனா பாதிப்பால் அவதியடைந்து வந்த வாணி ராணி சீரியல் நடிகை தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது பூரண குணமடைந்துள்ளார்.

கொரோனா வைரஸ்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்துள்ளதால், அதனை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய – மாநில அரசுகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேசமயம் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், நிறுத்தப்பட்ட சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை தொலைத்த பலர், மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

கொரோனா உறுதி

இந்நிலையில் சின்னத்திரை சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்ற வாணி ராணி சீரியல் புகழ் நடிகை நவ்யா சுவாமிக்கு, சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் இவர், தமிழில் வாணி ராணி, ரன், அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். உரிய பாதுகாப்புடன் சீரியல் பணிகள் துவங்கிய போதிலும், பெங்களூரை சேர்ந்த நவ்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இதனைத்தொடர்ந்து நவ்யா சுவாமி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

குணமடைந்த நவ்யா

இந்த நிலையில், தற்போது தனது உடல்நிலை முற்றிலும் குணமடைந்துவிட்டதாக நடிகை நவ்யா தெரிவித்துள்ளார். தான் குணமடைய உதவிய அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தான் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவர்க்கும் நன்றி எனக் கூறியுள்ளார். மக்கள் அனைவரும் கவனமாக இருக்குமாறு வலியுறுத்திய நவ்யா, கொரோனா குணப்படுத்தக்கூடிய நோய் தான், இருந்தாலும் அவ்வளவு மாத்திரைகள் எடுத்துக்கொண்டு, தனியாக ஒரு அறையில் இருப்பது மிகவும் கடினமான விஷயம் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here