தேமுதிக தலைவர் விஜயகாந்த் கந்தசஷ்டி கவசம் படிக்கும் வீடியோவை தனது டுவீட்டர் பக்கத்தில் பதிவிட்டு “எம்மதமும் சம்மதம்” எனத் தெரிவித்துள்ளார்.

கடும் கண்டனங்கள்

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தஷ்டி கவசம் பாடல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதற்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் முடக்கப்பட்டதோடு, அதன் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் யார் பேசினாலும் கடும் நடவடிக்கை பாயும் என அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இழிவுபடுத்துவது தவறு

கந்தசஷ்டி கவசத்தை மையமாக வைத்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கந்தசஷ்டி கவசம் படிக்கும் வீடியோவை தனது டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் ”வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும் கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கந்தசஷ்டி கவசம் படித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுப்படுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம் என விஜயகாந்த் அந்த பதிவில் கூறியுள்ளார். #தமிழ்கடவுள்முருகனுக்குஅரோகரா என்ற ஹேஷ்டேக்கையும் தனது பதிவுடன் அவர் இணைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here