கொரோனா பாதிப்பு காரணமாக சீரியல்களில் பல கேரக்டர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில், சித்தி 2 சீரியலின் வில்லியாக நாயகி சீரியலின் நடிகை நடிக்கவுள்ளார்.

கொரோனா பிரச்சனை

கொரோனா ஊரடங்கு காரணமாக மற்ற தொழில்களைப் போலவே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட சீரியல் படப்பிடிப்புகள் சில நிபந்தனைகளுடன் நடத்திக்கொள்ள அண்மையில் அரசு அனுமதித்தது. இதனால் மீண்டும் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் புதிதாக பதிவு செய்யப்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கின்றன. கொரோனா அச்சம் காரணமாக நடிகர், நடிகைகள் பலர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். சிலரால் வெளியூர்களில் இருந்து வர முடியவில்லை. இதனால் சீரியல் கதாபாத்திரங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மீண்டும் ரசிகர்களைக் கவர, சுவாரஸ்யத்திற்காக புதிய கேரக்டர்கள் பல சீரியல்களில் புகுத்தப்பட்டுள்ளன.

கதபாத்திரங்கள் மாற்றம்

ராதிகாவின் சித்தி 2 சீரியலிலும் இதுபோன்ற மிகப்பெரிய மாற்றங்கள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. முன்பு சித்தி 2 சீரியலில் ராதிகாவுக்கு கணவராக பொன்வண்ணன் நடித்து வந்தார். இனி அவருக்கு பதிலாக நடிகர் நிழல்கள் ரவி அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் ராதிகாவின் இரண்டாவது மருமகளாக வந்த நிதிலா சுமனுக்கு பதிலாக வேறொருவரும், பொன்வண்ணன் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த சில்பாவிற்கு பதிலாக ஜெயலட்சுமியும் மாற்றம் செய்யப்பட்டு சித்தி 2 சீரியல் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. கொரோனா பிரச்சனையால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

வில்லி கேரக்டரில் நாயகி நடிகை

நடிகை ராதிகாவும் இதனை உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சித்தி 2 தொடர்கிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நடிகர்களுக்கு பதிலாக வேறு சில நடிகர்களை நடிக்க வைக்கிறோம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். பாதுகாப்பே முக்கியம். விரைவில் சித்தி 2 சன் டிவியில் ஒளிபரப்பாகும்” எனத் தெரிவித்திருந்தார். சித்தி 2′ சீரியலில் ஆந்திராவைச் சேர்ந்த நடிகை ஸ்ரீஷா வில்லியாக நடித்து வந்தார். தற்போது கொரோனா அச்சுறுத்தலால் அவரால் அங்கிருந்து வர இயலவில்லை. இதனால் அவருக்குப் பதிலாக மீரா கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இதனை அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளார் மீரா கிருஷ்ணன். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here