ரேசன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
கொரோனா அச்சம்
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசங்கள் அணிந்தவாறே மக்கள் வீட்டை விட்டு வெளியே சென்று வருகின்றனர்.
இலவச முகக்கவசம்
இந்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு 2 முகக்கவசங்கள் வீதம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி ரேசன் கடைகளில் இலவச முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். ரூ.13 கோடியே 48 லட்சம் மறுபயன்பாடு துணி மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளன.