தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஜூன் 1ம் தேதி முதல் ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமான காரணத்தால் ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஜூலை 31ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமலும், எப்போது திறக்கப்படும் என தெரியாமலும் இருந்து வந்தது.

பள்ளிகள் திறப்பு

இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பம் விநியோகம் செய்யப்படவுள்ளது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ – மாணவிகள் சேர்க்கை ஊரடங்கு முடிந்தவுடன் 3.8.2020 முதல் நடைபெறும் என்றும் மாணவ – மாணவிகளுக்கு விண்ணப்ப படிவமும் அன்றே வழங்கப்படும் என்றும் பதினொன்றாம் வகுப்பிற்கு விண்ணப்ப படிவம் வழங்கும் தேதி மதிப்பெண் பட்டியல் வந்தவுடன் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் எந்த இடத்திலும் கூட்டம் சேரக்கூடாது என்பதை புரிந்து கொண்டு பெற்றோர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here