புதிதாக யூடியூப் சேனல் தொடங்கியுள்ள நடிகை கஸ்தூரி அதில் முதல் புரொமோ வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
சரமாரியாக திட்டிய வனிதா
விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் குறித்து நாளுக்கு நாள் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. திரைப்பிரபலங்களும், நெட்டிசன்ஸூம் நடிகை வனிதாவிற்கு அறிவுரையும் அதேசமயம் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி போன்றோர் கருத்து கூறிய நிலையில், தனது வாழ்க்கையில் யாரும் தலையிடக்கூடாது என தடாலடியாக பதில் அளித்தார் நடிகை வனிதா. இதனால், அவர்கள் மன்னிப்பு கேட்டு விலகினர். இந்த நிலையில், யூடியூப் நேரலை ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணனும், வனிதாவும் பங்கேற்றனர். அப்போது வயது வித்தியாசம் கூட பார்க்காமல் லட்சுமிராகிருஷ்ணனை வனிதா சரமாரியாக தாக்கிப் பேசினார். தகாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.
ரசிகர்களை அதிரவிட்ட கஸ்தூரி
வனிதா பேசியதைப் பார்த்து லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக டுவிட்டை போட்டார் நடிகை கஸ்தூரி. இதனை பார்த்து கடுப்பான வனிதா, கஸ்தூரியையும் ஒரு கை பார்த்தார். நடிகை வனிதா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் தொடங்கி, அதற்கு பல சப்ஸ்கிரைபர்களும் குவிந்தனர். அதனைப்பார்த்து பொறாமை பட்டு நீங்கள் எல்லாம் இப்படி பேசுகிறீர்கள் என்று நடிகைகள் கஸ்தூரி மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா விளாசித் தள்ளினார். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க நினைத்த கஸ்தூரி, “கனெக்ட் வித் கஸ்தூரி” என்ற பெயரில் புதிதாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். அதில் பதிவிட்ட முதல் புரொமோவே ரசிகர்களை அதிர வைத்தது.
வனிதா பாணியில் பதிலடி
பீட்டர் பாலின் புரோடக்சன் அலுவலகத்தில் வனிதா எப்படி வந்தாரோ, அதேபோல கஸ்தூரி கையில் டிபன் பாக்ஸுடன் நடந்து வந்து மிரட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் வனிதா, பீட்டர் பாலுக்கு எங்கே உணவு பரிமாறினாரோ, அதே இடத்தில் கஸ்தூரி அந்த அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உணவை பரிமாறுகிறார். வரலாற்று புகழ்பெற்ற இடத்தில் சென்று உட்கார்ந்து பேசலாமா என்று கேட்டு, வனிதாவும் பீட்டர் பாலும் பேசிய இடத்திற்கே அவர்களையும் அழைத்துச் சென்று பேசுகிறார் நடிகை கஸ்தூரி. இதனை பார்த்த ரசிகர்கள் பலர், ‘இன்னும் பல தரமான சம்பவங்களுக்காக காத்திருக்கிறோம்’ எனக்கூறி தங்களின் ஆதரவை தெரிவித்திருக்கின்றனர். ‘செம மாஸ் ஓப்பனிங், இதைத்தான் எதிர்பார்த்தோம்’ என்றும் பலர் நடிகை கஸ்தூரிக்கு ஆதரவாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். கஸ்தூரியின் இந்த புதுவிதமான முயற்சியால் வனிதா – கஸ்தூரி இடையே ஆன விவகாரம் சூடுபிடித்துள்ளது.