கொரோனா லாக்டவுன் நேரத்தில் நடிகர் விஜய் படங்கள் தான் மக்களால் அதிகம் பார்க்கப்பட்டது என்ற செய்தி போலியானது என BARC அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

விஜய் படங்களுக்கு வரவேற்பு

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். மேலும் அவரது படங்கள் வெளியாகும் நாட்கள் திரையரங்கம் முழுவதும் திருவிழா போல காட்சி அளிக்கும். அதுவும் விஜய் படத்திற்கு என்றால் மக்கள் குடும்பம் குடும்பாக சென்று பார்ப்பர். அந்த அளவிற்கு அவர் ஒவ்வொரு குடும்பத்திலும் இடம் பிடித்துள்ளார். விஜய்க்கு ரசிகர்களை விட ரசிகைகள் தான் அதிகம் என்று சொல்லப்படுகிறது. அவரது படங்கள் அனைத்தும் பெரும்பாலும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகின்றது. இதனாலேயே விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் மற்றும் மார்க்கெட் உண்டு.

விஜய் தான் நம்பர் 1!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருப்பதால், செல்போனிலும், தொலைக்காட்சிகளிலும் மூழ்கிக் கிடக்கின்றனர். OTT தளங்களில் புதிய படங்கள் சில வெளியானாலும், டிவி சேனல்கள் பல படங்களை மாறி மாறி ஒளிபரப்பின. மக்களும் குடும்பத்தோடு ஒன்று சேர்ந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட திரைப்படங்களை ஒன்று விடாமல் பார்த்து ரசித்தனர். குறிப்பாக விஜய் நடித்த படங்கள் அதிகளவில் ஒளிப்பரப்பட்டுள்ளதால், விஜய் தான் இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட ஹீரோ என ஒரு புள்ளி விவரம், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் விஜய் சுமார் 117 மில்லியன் பார்வைகளுடன் இந்திய அளவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் ராகவா லாரன்ஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் பிரபாஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த முடிவு வெளியானதால், விஜய் தான் இந்தியாவில் டிஆர்பி கிங் எனக்கூறி அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.

டிஆர்பியில் டாப்?

இந்தியாவில் தொலைக்காட்சி பார்வையாளர்கள் பற்றிய விவரங்களை வெளியிடும் BARC என்ற அமைப்பு இந்த டிஆர்பி விவகாரம் குறித்து டுவிட்டரில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், நடிகர் விஜய் நம்பர் 1 என்று குறிப்பிட்டு பகிரப்படும் புள்ளிவிவரம் தாங்கள் வெளியிட்டது அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் BARC அமைப்பின் லோகோ பயன்படுத்தப்பட்டு இருப்பதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. BARC அமைப்பின் இந்த விளக்கத்தால் நடிகர் விஜய் டிஆர்பியில் நம்பர் 1 என்று பரவிய தகவல் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. விஜய் தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த சில பிரபலங்கள் கூட அதனை தங்களது பதிவில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த டிஆர்பி தொடர்பான மீம்ஸ்கள், புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here