கடவுள் கிருஷ்ணனை ஆபாசமாக சித்தரித்ததாக பிரபல முன்னணி OTT தளத்தில் வெளியான வெப் சீரிஸ்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அடல்ட் கன்டென்ட்

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. இது இந்தியாவையும் விட்டு வைக்காததால், கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இந்த நேரத்தில் அனைவருக்கும் செல்போனும், இணையதளமுமே கதி என்ற நிலை ஏற்பட்டது. திரையரங்குகளுக்கு செல்ல முடியாத காரணத்தால் இளைஞர்களின் கவனம் OTT பக்கம் திரும்பியது. இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட பல OTT நிறுவனங்கள், மக்களின் பொழுது போக்காக மாறின. பல வெப் சீரிஸ்கள் இளைஞர்களின் ஃபேவரேட் ஆக அமைந்தது. இதில் எம்.எக்ஸ். பிளேயரில் ஆபாச கதைகள் வெப் சீரிஸ் ஆக கொட்டிக் கிடக்கின்றன. செல்போன்களிலேயே பார்த்து விட முடியும் என்பதால், குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வெப் சீரிஸ்கள் அதிகம் 18+ ஆகவே வெளியாகின்றன. குறிப்பாக இளைஞர்களை ஈர்க்க தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெப் சீரிஸ்கள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளது. அதனை பார்க்கவே இளைஞர்கள் அதிகம் OTT தளமே கதி என்று கிடக்கின்றனர்.

சர்ச்சை வெப் சீரிஸ்

இது ஒருபுறம் இருக்க சர்ச்சைக்குரிய வெப் சீரியஸ்களும் அவ்வப் போது வெளிவந்துக் கொண்டிருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தயாரிப்பில் வெளியான ‘பாதாள் லோக்’ உட்பட பல வெப் சீரிஸ்கள் இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக சர்ச்சைகள் எழுந்தது. பாலிவுட் பிரபலங்கள் பலர் இந்து மதத்தை தவறாக சித்தரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. இதுபோன்ற விஷயங்களை தவிர்க்க OTT தளத்திற்கு சென்சார் வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

வலுக்கும் கண்டனம்

இதனிடையே, இந்து மத கடவுளான கிருஷ்ணரை அவமதிக்கும் வகையில் பிரபல OTT தளத்தில் வெளியாகியுள்ள ‘கிருஷ்ணா அண்ட் இஸ் லீலா’ என்ற வெப் சீரிஸ்தான் இப்போது ஹாட் டாக்காக உள்ளது. இந்த வெப் சீரிஸில் கிருஷ்ணா என்ற நாயகன், பெண்களை ஏமாற்றி மோசடி செய்வதாக காட்டப்பட்டுள்ளது. இந்து மத கடவுளான கிருஷ்ணரை இதுபோல் தவறாக சித்தரிப்பதா? எனக் கேள்வி எழுப்புபவர்கள், இதனை கண்டித்து குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர். அந்த OTT தளத்தில் ஒளிபரப்பாகும் சம்மந்தப்பட்ட வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here