தேவையானவை

சக்கரைவள்ளிக் கிழங்கு – 1

சர்க்கரை – 2 சிட்டிகை

ஜவ்வரிசித் தூள் – 3 சிட்டிகை

முந்திரி பருப்புத் தூள் (தோல் நீக்கியது) – 1 சிட்டிகை

பாதாம் பருப்புத் தூள் – 1 சிட்டிகை

பால் -3 டம்ளர்

ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை

குங்குமப்பூ – 1 சிட்டிகை

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசித் தூளை எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து ஒருமணி நேரம் ஊற வைக்க வேண்டும். குக்கரில் சக்கரைவள்ளிக் கிழங்கை பாதியாக வெட்டி வைத்து, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 3 அல்லது 4 விசில் வரும் வரை வேக வைக்கவும். பிறகு ஒரு வாணலியில் பாலை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, ஐந்து நிமிடங்களுக்கு பிறகு ஜவ்வரிசியை சேர்க்கவும். அதன்பின் அடுப்பினை சிம்மில் வைத்து மெதுவாக கலக்கி 5 நிமிடம் கழித்து அதனுடன் சர்க்கரை, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு போன்றவைகளை சேர்த்து, இரண்டு நிமிடம் நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும். பிறகு குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு இறக்கினால், சத்தான சக்கரைவள்ளிக் கிழங்கு பாயாசம் தயார்.

நன்மைகள்

சக்கரைவள்ளிக் கிழங்கை உண்டால் கொழுப்பு அதிகளவில் உடலில் சேராமல் தடுக்கும். நீரிழிவு நோயாளிகள் தாராளமாக உண்ணக்கூடிய உணவு. பொட்டாசியம், மெக்னீசியம், மினரல் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கக்கூடியது. கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here