நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “காட்டுப் பயலே” பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சூரரைப் போற்று’

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களின் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஷாக்கி ஷாரூப், சம்பத், விவேக் பிரசன்னா, காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரூ.15 கோடி மதிப்பில் தயாராகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இந்நிலையில், ‘சூரரைப் போற்று’ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி தற்போது “சூரரைப் போற்று” படத்தின் “காட்டுப் பயலே” பாடல் வெளியீட்டு தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். “காட்டுப் பயலே” பாடல் வருகிற 23 ஆம் தேதி வெளியாகும் என்று ஜிவி பிரகாஷ் கூறியிருக்கிறார். சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ம் தேதி சூரரைப் போற்று பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் ‘சூரரைப் போற்று’வின் “காட்டுப் பயலே” பாடல் செய்தியை ரசிகர்கள் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here