பிரபல இயக்குநர் கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
“வேட்டையாடு விளையாடு”
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் “வேட்டையாடு விளையாடு”. கவுதம் மேனன் இயக்கிய இப்படத்தில் நாயகியாக ஜோதிகா நடித்து இருந்தார். மேலும் பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர். காவல்துறை அதிகாரியாக கமல் நடித்திருந்தது ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்று, நல்ல வசூலையும் பார்த்தது.
கீர்த்தி சுரேஷ்?
தற்போது “வேட்டையாடு விளையாடு” படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகை அனுஷ்காவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.