சமூகத்தில் ஒரு சிலர் மற்றவர்களுடைய மதம் சார்ந்த விஷயங்களை கையில் எடுத்து அதில் பிரச்சனையை உருவாக்குவது வாடிக்கையாகிவிட்டதாக நடிகர் பிரசன்னா வேதனை தெரிவித்துள்ளார்.

ஹிட் படங்கள்

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் பலரையும் கவர்ந்தவர் நடிகர் பிரசன்னா. கல்லூரி வயதிலிருந்தே நடிப்பு, மிமிக்கிரி போன்றவைகளை செய்து அசத்தி வந்தார். தனது முதல் படமான ‘5 ஸ்டார்’ படத்தில் மணிரத்தினத்தின் தயாரிப்பில் நடித்தார். அதன்பின் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் ரசிகர்கள் மனதில் அப்போது இடம்பிடிக்க முடியவில்லை. கண்ட நாள் முதல் என்ற படம் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல பிளாக் பஸ்டர் ஆக அமைந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தில் வரும் “மேற்கே மேற்கே மேற்கேதான்”‘ என்ற பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் பாடலாக திகழ்கிறது. இதன்பின் சீனா தனாவில் வடிவேலுடன் இணைந்து காமெடி சரவெடியாக வெடித்தார்.

திருப்புமுனை தந்த படம் 

கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த பிரசன்னாவிற்கு அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே. இதில் பிரசன்னாவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. சிறந்த துணை நடிருக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது. அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் பிரசன்னா சிநேகாவுடன் இணைந்து நடித்தார். இப்படத்திற்காக தமிழக அரசின் விருதையும் வென்றுள்ளார் பிரசன்னா. அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்து, பின்னர் திருமணம் செய்துகொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தண்டிக்கப்பட வேண்டும்

சினிமாவில் 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் பிரசன்னா. தனது 25வது திரைப்படத்தில் மீண்டும் சிறந்த துணை நடிருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். ஒவ்வொரு நடிகரின் வாழ்க்கையில் 25வது படம் மிகவும் முக்கியம். அந்த வரிசையில் பிரசன்னா தனது வில்லதனமான நடிப்பை 25வது படமான திருட்டுப் பயலே 2ல் வெளிபடுத்தினார். நடிகர் பிரசன்னா சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்காக அவ்வப்போது குரல் கொடுப்பவர். அந்த வரிசையில், இந்து மதத்தின் நம்பிக்கை கடவுளான முருகனின் கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்தது தொடர்பான சர்ச்சை எழுந்தது. இதற்கு பல தரப்பினரும் தங்களது கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர். நடிகர் பிரசன்னாவும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரசன்னா கூறியுள்ளதாவது; “எவருடயை நம்பிக்கையையும் ஒரளவு விமர்சிக்கிறேனென்று கொச்சைப்படுத்துவது பெரிதாய் பேசப்படும். அது மதசார்ப்பின்மைக்கு நல்லது அல்ல. அவரையேன் கேட்பதில்லை. இவரையேன் கேட்பதில்லை என்ற வாதமும் பயன் அளிக்காது. அவரவர் நம்பிக்கை அவர் அவருக்கு பெரிது. அதை மதிக்கத்தெரியாத போக்கிரிகள் யாராயினும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here