பிரபல ஹாலிவுட் நடிகையும், நடிகர் டிரவோல்டாவின் மனைவியுமான கெல்லி பிரஸ்டன் மார்பாக புற்றுநோய் காரணமாக காலமானார். அவருக்கு வயது 57.

சிறந்த அறிமுகப் படம்

கெல்லி ஸ்மித்துக்கு பூர்வீகம் என்று ஒன்று இல்லை. ஈரான் மற்றும் ஆஸ்திரேலியா என மாறி மாறி வாழ்ந்து வந்தார். இதன்பின் படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு தனது 16வது வயதில் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார் கெல்லி. 1980 ஆம் ஆண்டு “பூளு லகான்” என்ற திரைப்படத்திற்காக ஆடிஷனிற்கு சென்றார். ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனையடுத்து தனது பெயரை பிரஸ்டன் என மாற்றிக்கொண்டார். இதன்பின் இவர் நடித்த முதல் திரைப்படமான மர்லின் மெக்கவுலிக்கின் “டின் பிளிக் மிஸ்செப்”, அவருக்கு ஒரு சிறந்த அறிமுக படமாக அமைந்தது.

திரைப்பயணத்தில் மைல்கல் 

பின்னர் பல படங்களில் கெல்லி நடிக்கத் துவங்கினார். ஸ்பேஸ் கெம்ப், டுவின்ஸ் ஆகிய படங்களில் இவர் ஏற்ற கதாபாத்திரம் அனைவரிடமும் பிரபலமானது. தனது ஆரம்பகாலத்திலேயே பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் கெல்லி பிரஸ்டன். ஹாலிவுட் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களான அர்னால்டு மற்றும் டாம் குருஸ் ஆகியோருடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடனும் நடித்துள்ளார். இவரது சில திரைப்படங்கள் உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இடம்பெற்றுள்ளன. இவரின் பேட்டில் பில்டு திரைப்படம், ஹாலிவுட் சினிமா வரலாற்றில் இல்லாத பல வகையில் பல சாதனைகளை புரிந்தது.

உடல்நிலையில் பாதிப்பு 

கெல்லி ஸ்மித்துக்கு கடந்த இரண்டு வருடங்களாக மார்பக புற்றுநோய் இருந்து வந்துள்ளது. அதற்கு அவர் சரியான மருத்துவ பரிசோதனை எல்லாம் செய்து வந்துள்ளார். ஆனால் கடந்த 12 ஆம் தேதி கெல்லி இறந்துவிட்டதாக அவரது கனவர் டிரவோல்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த கெல்லி, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தார். அதன்பின்னே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here