சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
நீலகிரியில் அதிக மழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரயில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 9 செ.மீ, நடுவட்டம் 8 செ.மீ, கூடலூர் பஜாரில் 7 செ.மீ, அவலாஞ்சியில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் வங்கக்கடல், அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.