தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை தமன்னா ஒரு டாக் ஷோவை தொகுத்து வழங்க உள்ளதாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றது.

தொகுப்பாளினியாகும் நடிகை

15 வருடங்களாக சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, பிரபுதேவா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து, பாகுபலி போன்ற பல மெகா ஹிட்டான படங்களையும் கொடுத்துள்ளார். 15 வருட சினிமா பயணத்தில், பல ரசிகர்களை அவர் தன் வசம் வைத்துள்ளார். சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் ஒரு டாக் ஷோவில் தொகுப்பாளராக பணியாற்றப் போகிறார் என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இதைப்பற்றி எந்த செய்தியும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் துவங்கியுள்ள ஆகா என்ற ஒரு OTT தளத்திற்காகத் தான் இந்த ஷோவை நடத்த உள்ளனர் என்று பலரும் கூறுகின்றனர். இந்த நிகழ்ச்சியை தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனும், தமன்னாவும் இணைந்து தொகுத்து வழங்கப் போவதாக கூறுகின்றனர். இந்த நிகழ்ச்சியைப் பற்றி பல செய்திகளும் டீசருடன் விரைவில் வெளியாகலாம் என்று ரசிகர்களால் பெருமளவு எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா பின்புலம்

சினிமாத் துறையில் வாரிசு நடிகர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், சினிமாவில் தான் பட்ட கஷ்டங்களை விவரித்துள்ளார் தமன்னா. மும்பையில் இருக்கும் பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியதாகவும், அந்த சமயத்தில் சினிமா பின்புலம் இல்லாமல் வந்ததால் வாய்ப்பு கிடைப்பதற்கு மிகவும் கடினமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மொழியும் தெரியாததால் தனது திறமை ஒன்றை மட்டுமே நம்பி பல பட வாய்ப்புகளை பெற்று கடினமாக முன்னேறி தற்போது முன்னணி நடிகையாக இருப்பதாகவும் தனது வெற்றிக்கு உழைப்பும், விதியும் தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.

ரூ. 7 லட்சம் சம்பளம்?

ஷாருக்கான், விக்ரம், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்கள், சினிமா பின்புலம் இல்லாமலேயே ஜெயித்துக் காட்டியிருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்ட தமன்னா, நடிகர்களின் வாரிசு என்பதால் அவர்களுக்கு அதிகம் வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் ஆனால் வெற்றி தோல்வி என்பது அவர்களின் உழைப்பை பொறுத்தே அடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு டாக் ஷோவை தொகுத்து வழங்க உள்ள தமன்னா அதை பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியே கூறவில்லை. ஒரு எபிசோடுக்கு அவர் 7 லட்சம் வரை சம்பளம் கேட்பதாக சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது. இதனை பற்றிய அதிகாரப்பூர்வமான செய்திக்காக அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here