மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் அஜித் நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இயக்குநரின் மரணத்தால் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தல அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக பலர் இருந்தாலும், அஜித் என்றாலே தனி மதிப்பும், மரியாதையும் எப்போதும் உண்டு. இன்றும் பலரின் கனவு நாயகனாகவே வளம் வந்து கொண்டு இருக்கிறார் தல அஜித். சினிமா பின்புலம் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறி வந்த பல நடிகர்கள் இருந்தாலும், நம் மனதிற்கு முதலில் நினைவிற்கு வருபவர் அஜித் தான். பலவகையான தோல்விகளையும், சினிமா அரசியல்களையும் சந்தித்து இப்போது தலயாக நிமிர்ந்து நிற்கிறார் நம் அஜித். நடிப்பு மட்டுமல்லாமல் கார் ரேசிங், பைக் ரேசிங், ரைபிள் ஷூட், புகைப்படம் எடுப்பது போன்ற அனைத்து துறைகளிலும் கை தேர்ந்தவர். சொந்த உழைப்பாலும், எதார்த்தமான நடிப்பாலும் லட்சக்கணக்கன ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். அவரின் ரசிகர் பட்டாளத்திற்கு ஆண், பெண் என்ற பேதமும் கிடையாது, வயது வரம்பும் கிடையாது. அந்தளவிற்கு மக்கள் மனங்களில் வாழ்ந்து வருகிறார் தல அஜித்.

அய்யப்பனும் கோஷியும்

சாக்லேட் பாய் ஆகவும், ரொமான்டிக் ஹீரோவாகவும், போலீஸ் அதிகாரியாகவும் பல ரோல்களில் நடித்து பிரபலமாக இருந்து வருகிறார் அஜித். சினிமாவில் ஒரு மொழியில் வெற்றியடைந்த படத்தை பல மொழிகளில் இயக்குவது எப்பொழுதும் நடக்கும் ஒரு விஷயம்தான். அதேபோல், மற்ற மொழிகளில் ஹிட்டான படங்கள் தமிழில் சக்கைப் போடு போட்டுள்ளது. ஆனால் சில படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு இல்லாமலும் போனது. கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் தான் அய்யப்பனும் கோஷியும். சாக்ஷி இயக்கிய இந்த படத்தில், அய்யப்பனாக பீஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்தனர். இரண்டு பேருக்கு இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், சூப்பர் ஹிட்டானதையடுத்து, தமிழிலும் இயக்க திட்டமிட்டிருந்தனர். அதற்கான பணிகளும் நடந்ததாக கூறப்படுகிறது.

நிறைவேறாமல் போன ஆசை?

அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க, அஜித் அப்படத்தின் இயக்குநரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அய்யப்பனும் கோஷியும் படத்தை அஜித்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்த இயக்குநர், ஊரடங்கு முடிவடைந்த பின் இதனை தயாரிக்க திட்டமிட்டு இருந்தாராம். திடீரன்று இயக்குநர் உயிர் இழந்ததால், அத்திட்டம் டிராப் ஆனதாகவும், இதனால் அஜித்தின் நீண்டநாள் ஆசை நிறைவேறாமல் போனதாகவும் பலர் கூறி வருகின்றனர். வேறு இயக்குநர்கள் யாராவது இதை எடுத்து இயக்குவார்கள் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழில் ஈகோ சார்ந்த படங்கள் அனைத்தும் பெருமளவு பேசப்பட்டு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அந்தவகையில் அய்யப்பனும் கோஷியும் படம் தமிழில் வெளிவந்தால், அதுவும் அஜித் நடித்தால் பெருமளவில் பேசப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இயக்குநரின் மரணம் அனைத்திற்கும் கேள்விக்குறியாகிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here